கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் மலைப்பகுதியில் இருந்து ஏராளமான குரங்குகள் தினமும் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரிகின்றன. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கொண்டு வரும் ஆவணங்கள், பொருட்களை எடுத்து வீசுகின்றன. எனவே கலெக்டர் அலுவலகத்தை சுற்றி அதிக அளவில் குரங்குகள் சுற்றுவதால் அவற்றை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.