சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்

Update: 2022-09-29 15:21 GMT

சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள அங்கான்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுகின்றது. இதன் காரணமாக குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்