தென்காசி தாலுகா கருத்தப்பிள்ளையூர் அருகே உள்ள கடனாநதி அணையின் அழகை பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் குளிப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே அங்கு விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அணையை பார்த்து ரசிக்க அனுமதி வழங்குவதுடன், அணையின் ஏதாவது ஒரு பகுதியில் குளிக்கவும் அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.