சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை சேதுமடைந்துள்ளது. இதனால் வெளியூரில் இருந்து பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் அலுவலகம் இருப்பது தெரியாமல் அலைந்து திரிந்து வருகின்றனர். இதை தவிர்க்க பெயர் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.