திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கத்தில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் பழைய கருவூல அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பல மாதங்களாக பயன்பாடு இன்றி விடப்பட்டது. இதனால் கட்டிடம் பாழடைந்து வருகிறது. மேலும் கட்டிடம் முன்பு கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. எனவே கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.