கோத்தகிரி அருகே உள்ள எரிசிபெட்டா பகுதியில் செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இந்த ஓடை நீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது ஓடை நீரோட்டம் புதர் செடிகளால் தடைபடுவதால், விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.