பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் திறந்த வெளியில் சிலர் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே திறந்த வெளியில் அசுத்தம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.