பழனி நகராட்சி அலுவலகத்தில் உள்ள லிப்ட் கடந்த சில நாட்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் நகராட்சி அலுவலகத்திற்கு வரி செலுத்த மற்றும் பிற சேவைகளை பெற வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே லிப்ட் செயல்பட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.