அரியலூர் மாவட்டம, தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது கீழ நத்தம் கிராமம். இங்குள்ள ஆரியான் ஏரியில் உள்ள (கலிங்கு ) ஏரியின் உள்ளே நீர் நிரம்பிய பின் வெளியே செல்லும் பகுதி உயரம் குறைவாக உள்ளது. இதனால் போதிய அளவு ஏரியில் தண்ணீரை தேய்க்க வைக்க முடியவில்லை. இதனால் 100 ஏக்கருக்கு மேல் நெல் விளையும் பகுதிகள் கடைசி நேரத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் போகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியின் கலிங்கு பகுதியை உயர்த்தி கட்டி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .