பெங்களூரு ஜெயநகர் 7-வது பிளாக் 32-வது கிராஸ் பகுதியில் உள்ள நடைபாதையில் ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தின் வேர்கள் பட்டு போய் உள்ளது. இதனால் அந்த மரம் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் தெரிவித்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. நடைபாதையையொட்டியுள்ள சாலையில் தினமும் நுற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த மரம் வெட்டி அகற்றப்படுமா?