மந்திரியின் தொகுதியில் உடைந்து கிடக்கும் வழிகாட்டி பலகை

Update: 2022-09-28 14:25 GMT

பெங்களூரு பத்மநாபநகர் 14-வது கிராசை குறிக்கும் வகையில் ஒரு வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பலகை தற்போது உடைந்து கிடக்கிறது. வழிகாட்டி பலகை உடைந்து கிடப்பதால் புதிதாக வருபவர்கள் வழி தெரியாமல் நிற்கிறார்கள். பத்மநாபநகர் கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட தொகுதியாகும்.

மந்திரியின் தொகுதியில் வழிகாட்டி பலகை உடைந்து கிடப்பதை கூட சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வழிகாட்டி பலகையை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்