பெங்களூரு கம்மனஹள்ளி ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. கடைகளில் உள்ள பொருட்கள் நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ளதால் நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளை ஆக்கிரமிப்பு வைக்கப்பட்டு உள்ள கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.