அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி எம்.ஜி.ஆர்.நகர் நுழைவு வாயிலில் உள்ள ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பழைய மின்கம்பத்தை எடுத்து புதிய மின்கம்பத்தை நட்டு வைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.