கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அகிலாண்டபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 40 தொகுப்பு வீடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த தொகுப்பு வீடுகளை புதுப்பித்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.