புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-09-28 13:58 GMT

கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்தவர் கோதர் மைதீன். இவர், காந்திநகர் பகுதியில் சாலையோரம் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 வாரங்களாக தண்ணீர் வீணாக வெளியே செல்வதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்