அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரியலூர் பஸ் நிலையத்தில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் தங்களுக்கு தேவையான பஸ்கள் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.