நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் புதுக்காடு பஸ் நிறுத்தம் அருகே கைக்கு எட்டும் தூரத்தில் மின் பெட்டி பாதுகாப்பு இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இயற்கையை ரசித்து நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளோ அல்லது பொதுமக்களோ மின் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த மின் பெட்டியை உயரமான இடத்தில் வைத்து, மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.