விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ரேஷன் கடையில் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறபோதிலும் அவை தரமற்ற முறையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தரமான முறையில் பச்சரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்