அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் ஆதனக்குறிச்சி ஊராட்சி முதுகுளம் காலனித்தெருவில் உள்ள குடியிருப்புகளில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்களையும், திண்பண்டங்களையும் எடுத்துச்சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகளை கடிக்க வருவதுபோல் பயமுறுத்துகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.