அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், அணைக்குடம் ஆகிய ஊராட்சிகளிலும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் உடலநலக்குறை ஏற்பட்டால் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதயநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ செல்ல வேண்டி உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே சோழமாதேவி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.