படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுமா?

Update: 2022-09-28 11:20 GMT

நாமக்கல் நகரின் மைய பகுதியில் கமலாலய குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் மாலை நேரங்களில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் படகு சவாரி செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது குளத்தில் போதிய தண்ணீர் இருப்பதால் மீண்டும் படகு சவாரியை தொடங்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்