பழனியை அடுத்த கீரனூரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் இருந்து மேல்புறத்திற்கு செல்வதற்காக கைப்பிடி சுவருடன் கூடிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பராமரிப்பு இல்லாததால் கைப்பிடி சுவர் ஆங்காங்கே சேதமடைந்து பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் தொட்டியின் மேல்புறத்துக்கு செல்லவே ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கைப்பிடி சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.