மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2022-09-27 15:29 GMT

திருவாரூர் ராமநாதன் நகர் சித்திரை தெருவில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் தெரு முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பலத்த மழையின் போது மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்