மேச்சேரி-பென்னாகரம் ஒகேனக்கல் மெயின் ரோட்டில் திப்பரத்தாம்பட்டி பகுதியில் 30 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் அருகே உள்ள சாலையானது போக்குவரத்து அதிகம் உள்ள பரபரப்பான சாலை ஆகும். மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வெட்ட வெளியில் உள்ளதால் குழந்தைகள் மெயின் ரோட்டிற்கு வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. மேலும் மாலை நேரங்களில் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-தர்மராஜ்,, திப்பரத்தாம்பட்டி, சேலம்.