பெங்களூரு ராமமூர்த்தி நகர் 8-வது வார்டு சாந்தி லே-அவுட் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.