தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-14 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரின் முக்கிய பகுதியான பள்ளி சாலை, அரசு மருத்துவமனை, பழைய பைபாஸ் சாலை, பஸ்நிலையம் மற்றும் திருவள்ளுவர் சாலை பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-குமார், பரமத்திவேலூர்.

மேலும் செய்திகள்