தக்கலை அருகே வேப்பங்கொணம் கிராமத்தில் வேப்பங்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளத்தை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து வயல்வெளி போல் காட்சி அளிக்கிறது. இதானல், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரஸ்வதி, வேப்பங்கொணம்.