விருத்தாசலத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் நாய்களின் தொல்லை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக வி.என்.ஆர். நகர் பகுதியில் மக்கள் தொகையை விட நாய்களின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். அதனால் பொதுமக்களின் அச்சத்தை போக்க நகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?.