விருத்தாசலம் வட்டம் ராஜேந்திரப்பட்டிணம் கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை மனுவாக போட்டு வந்தனர். ஆனால் அந்த புகார் பெட்டி வைக்கப்பட்டு, ஒரு சில மாதங்கள் மட்டுமே திறந்து மனுக்கள் எடுக்கப்பட்டு, அதற்கு தீர்வு காணப்பட்டது. அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக புகார் பெட்டி திறக்கப்படாமலே, வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. எனவே அந்த புகார் பெட்டியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.