மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வீரபெருமாள்புரம் ஊராட்சியில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டிடத்தை தற்சமயம் ஊராட்சி அலுவலகமாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் நூலகம் வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.. எனவே ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.