ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர்

Update: 2022-09-26 16:40 GMT

சேலம் ஜங்ஷன் ரெயில்நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை அருகில் ஏரி இருப்பதால் இந்த பாதையில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்ட மின் மோட்டார் அடிக்கடி பழுது அடைந்து விடுகிறது. இதனால் இந்த பாதை வழியே மக்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள மிக குறுகிய சுரங்கப்பாதை வழியாக மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே உடனடியாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் சேற்றினை அகற்றி சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்