தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி, தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு பயணிகள் அமருவதற்கான இருக்கைகள் தரையோடு தரையாக மண்ணில் புதைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, தற்காலிக பஸ் நிலையத்தை முறையாக பராமரித்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.