தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் பலத்த மழையின் போது மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. மழைநீருடன் விஷப்பூச்சிகளும் வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?