விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2022-09-26 13:39 GMT

சுற்றுலா நகரமான ஊட்டியில் சேரிங்கிராஸ், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்