மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகில் பயணிகள் நிழலகம் உள்ளது. இது சரியாக பராமரிக்காமல் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழலகத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமணஞ்சேரி