நாகை மாவட்டம் நாகூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அதே சாலையில் நாகூர் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தின் அருகே போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரும்பிலான கண்காணிப்பு கேமரா கம்பம் மிகவும் சேதமடைந்து துருப்பிடித்து காணப்படுகிறது. மேலும் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.