விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2022-09-25 15:33 GMT

கூத்தாநல்லூர் தாலுகா வடபாதிமங்கலம் பகுதியில் பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் எம்.சாண்ட் மணல் தேவையற்ற மரங்கள், கற்கல் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துகளில் சிக்கிய வண்ணம் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்