சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணி 34-வது வார்டு பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற விஷ காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.