அறிவிப்பு பலகைகளால் சிரமம்

Update: 2022-09-25 12:45 GMT

அம்பையில் பாபநாசம், தென்காசி மெயின் ரோட்டில் ஆங்காங்கே அரசு அலுவலகங்கள் மற்றும் நகராட்சி தெரு பெயர்களை எழுதி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வைத்துள்ளனர். இந்நிலையில் அம்பை அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம் ஆகிய இடங்களுக்கு போகும் பகுதியான அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் பகுதியும் ஒரே இடத்தில் திரும்பும் நிலையில் உள்ளது. இங்கு அறிவிப்பு பலகைகள் மிகவும் தாழ்வாக உள்ளதால் தினசரி இந்த அலுவலகங்களுக்கு சென்று வருவோர்களும், காலை நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பும் பொதுமக்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே அந்த பலகைகளை இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் அல்லது உயரத்தில் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்