காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நும்பால் பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி அச்சுறுத்துகின்றன. சைக்கிள்களில் செல்லும் பள்ளி குழந்தைகளையும் கூட, குறைத்தும், துரத்தியும் தொந்தரவு செய்கின்றன. சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தி விரைவில் தீர்வு காண வேண்டும்.