சேலம் பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் அதிகம் காணப்படும். இந்தநிலையில் பஸ்நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் முதல் தின்பண்டங்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடைகளில் விற்கபடும் பொருட்களின் விரை அந்த பொருளின் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்கின்றனர். இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டு அந்த பொருளை வாங்கி வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கையாக உள்ளது.