தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் கால்நடை மருந்தக கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. மேலும் மருந்தகம் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே முட்புதர்களை அகற்றி கால்நடை மருந்தகம் உள்ள வளாகத்தை தூய்மைப்படுத்தி சுகாதாரமாக வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயா, மாரண்டஅள்ளி, தர்மபுரி.