திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கம்பம், தேனி பஸ்கள் நிற்கும் இடத்துக்கு எதிரே, பயணிகள் பஸ்நிலையத்துக்குள் வருவதற்கு அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் பயணிகளை பதம் பார்த்து விடும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க படிக்கட்டுகளை சீரமைக்க வேண்டும்.