சென்னை திருவொற்றியூர் அடுத்துள்ள விம்கோ டிப்போ மெட்ரோ அருகில் பாரத்நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கியாஸ் சிலிண்டரின் வாசனை காற்றில் பரவியது போல் உள்ளது. பயப்படும் அபாயம் இருப்பதாக தெரியவில்லை என்றாலும், கியாஸ் சிலிண்டரை திறந்தால் எவ்வாறு இருக்குமோ, அதுபோன்று வாசனை நகர் முழுவதும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டுகிறோம்.