பெங்களூரு பழைய மைசூரு சாலையில் பாதசாரிகள் ெசல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் கேபிள் வயர்கள் பதிக்கப்பட்டன. இந்த கேபிள் வயர் சுற்றியிருந்த ராட்சத மரஉருளையை அங்குள்ள நடைபாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த நடைபாதையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த ராட்சத மர உருளையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.