பெங்களூரு கெங்கேரி சாட்டிலைட் டவுன் அருகே சாலைக்கு அடியில் குடிநீர் குழாய் போடப்பட்டது. இந்த நிலையில் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் ஆறுபோல் ஓடி வீணாகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.