பெங்களூரு பின்னிபேட்டை பகுதியில் 3 சாலைகள் சந்திக்கும் சர்க்கிள் உள்ளது. இதனால் அங்கு மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி சுவர் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மின்விளங்கு கோபுரம் சுற்றி உள்ள சுவர் சேதமடைந்து உள்ளது. பல நாட்கள் ஆகியும் அது சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே அதை சரிசெய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.