கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேராப்பட்டு கிரமத்தில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் படிப்பறிவை மேம்படுத்தும் வகையில் அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடித்து இதுவரை அந்த நூலக கட்டிடம் திறக்கப்படாததால் அது பயனற்று கிடக்கிறது. எனவே பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டு பூட்டி கிடக்கும் நூலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?