கால்நடைகள் தொல்லை

Update: 2022-09-24 14:13 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் சாலையில் செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் நின்று கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்