திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. கஜா புயலின் போது இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தற்போது வரை புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதன்காரணமாக பள்ளிக்குள் அடிக்கடி கால்நடைகள், நாய்கள் புகுந்துவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? படம் இல்லை.